விக்னேஷ் சிவன் அடுத்த பட ஹீரோ இவர்தான் !

  • February 16, 2023 / 07:50 PM IST

நடிகர் அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது .இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் தனது 62 -வது படத்தில் நடிக்க உள்ளார் என்று 8 மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது .

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் விக்னேஷ் சொன்ன கதை லைக்கா நிறுவனத்திற்கும் நடிகர் அஜித்திற்கு திருப்தி அளிக்கவில்லை அதனால் விக்னேஷ் சிவன் – அஜித் படம் இனி நடைபெறாது என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சி தந்தது .

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து கதை கூறி உள்ளார் . விரைவில் இதன் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது . மேலும் இந்த படத்தில் நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus