இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பயோ பிக்கான ‘800’-ல் முதலில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கவிருந்தார். ஆனால், இவர் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததிலிருந்து இப்படத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின், முத்தையா முரளிதரன் வெளியிட்ட ஒரு அறிக்கையில் “வணக்கம். எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்திலிருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன்.
எனவே என்னால் தமிழ்நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அது மட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலை பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் எற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.
தற்போது, இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகர் மதுர் மிட்டல் நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்குகிறார். இதற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இன்று முத்தையா முரளிதரனின் பிறந்தநாள் என்பதால், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.
The untold story of #MuthiahMuralidaran
➡️ https://t.co/bqjCWvJGms#MadhurrMittal #MSSripathy @GhibranOfficial @Mahima_Nambiar @RDRajasekar @Cinemainmygenes @MovieTrainMP @VivekRangachari #800TheMovie #800MotionPoster pic.twitter.com/OaLYUz2yLN
— Sony Music South (@SonyMusicSouth) April 17, 2023