அடுத்த சம்பவத்திற்கு தயாரான அஜித் !

  • January 19, 2023 / 08:59 AM IST

போடா போடி படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் . இதை தொடர்ந்து நானும் ரவுடி தான் , தானா சேர்ந்த கூட்டம் , போன்ற படங்களை இயக்கி இருந்தார் ‌. இவர் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் நடிகர் அஜித் படத்தை இயக்க உள்ளார்‌.
.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித்தின் 62 வது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் தொடங்கு உள்ளது . விக்னேஷ் சிவன் – அஜித் கூட்டணியில் உருவாகும் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிப்பார் என்று சொல்லப்பட்டது ஆனால் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .மேலும் மும்பைக்கு சென்று அவரிடம் கதை கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

இந்நிலையில் நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் படத்தை முடித்துவிட்டு விஷ்ணு வரதன் படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க உள்ளது என்று கூறப்படுகிறது நடிகர் அஜித் – இயக்குநர் விஷ்ணுவர்தன் கூட்டணியில் வெளியான பில்லா, ஆரம்பம் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus