பிளாக்பஸ்டர் இயக்குனரிடம் கதை கேட்ட கார்த்தி !

  • December 24, 2022 / 11:38 AM IST

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சர்தார் . இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கி உள்ளார் . ராஷி கண்ணா , ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் . மேலும் நடிகை லைலா முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் . ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது .

இந்நிலையில் நடிகர் கார்த்தி நடிக்கும் அவரது 25 படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன் நடைபெற்றது .
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜப்பான் என்று தலைப்பு வைத்துள்ளனர் . குக்கூ , ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராஜூமுருகன் இந்த படத்தை இயக்கி வருகிறார் . அனு இம்மானுவேல் இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் . மேலும் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் .


இந்நிலையில் நடிகர் கார்த்தி டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியிடம் கதை கேட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . ஆனால் நடிகர் கார்த்தி இதுவரை கதைக்கு ஓகே கூறவில்லை என்றும் விரைவில் இது பற்றி முடிவு எடுப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus