மீண்டும் கைகோர்க்கும் பிளாக்பஸ்டர் காம்போ !

  • January 24, 2023 / 07:56 PM IST

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை சென்று தமிழ் நடிகனாக அசத்தி இருக்கிறார். நடிகர் தனுஷ் தற்போது வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார் .

இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்போது வாத்தி படத்தில் நடித்து முடித்து உள்ளார் . இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி இயக்குகிறார். ஜி. வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் வாத்தி படத்தை பிப்ரவரி மாதம் 17 -ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்து இருந்தது .


இது ஒரு பக்கம் இருக்க வாத்தி படத்தின் ஆடியோ லான்ச் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடக்க உள்ளது என்று கூறப்படுகிறது .

இந்நிலையில் நடிகர் தனுஷ் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது . விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus