வேற மாதிரி சம்பவம் செய்யும் நெல்சன் !

  • January 28, 2023 / 07:35 PM IST

இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை . அண்ணாத்தே படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர் . இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் .

ஜெயிலர் படத்தின் சென்னையில் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது அதன் பிறகு கடலூரில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது . ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு , மலையாள நடிகர் விநாயகன் , தரமணி புகழ் வசந்த் ரவி ஆகியோர் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்கள் .

இந்நிலையில் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் படக்குழு புதிய டீசர் ஒன்றை வெளியிட்டு இருந்தது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . இது ஒரு பக்கம் இருக்க மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் , தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் .

இந்நிலையில் நடிகை தமன்னா இந்த படத்தில் நடிப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி இருந்தது . தற்போது பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இதனால் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus