தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு ஹீரோயினாக மாறிய நடிகைகளின் பட்டியல் ஏராளம்.
இந்த வகையில் நடிகர் சூர்யாவுக்கு சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் மகளாக நடித்த ஸ்ரியா ஷர்மா தற்போது வளர்ந்து ஹீரோயினாக நடிப்பதற்கு தயாராக உள்ளார்.
சில்லுனு ஒரு காதல் படத்தில் தனது கியூட் ரியாக்சன் மூலமும் சிறந்த நடிப்பின் மூலமும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த குழந்தைதான் இந்த ஸ்ரியா ஷர்மா.
ஏற்கனவே அஜித்தின் மகளாக நடித்த அனிகா விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வெளியீட்டு ஹீரோயினாக மாறுவதற்கு தயாராக உள்ளதாக அறிவிப்பு வரும் நிலையில் இந்த குழந்தை நட்சத்திரமும் வளர்ந்து நிற்கும் புகைப்படத்தை கண்டு அனைவரும் வியக்கிறார்கள்.
இந்நிலையில் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் ஸ்ரியா நடிகர் சூர்யாவுக்கு மகளாக நடித்து விட்டேன், சூப்பர் ஸ்டாருக்கு மகளாக நடித்த பின்பு ஹீரோயினான மீனாவை போல எனக்கும் சூர்யா சாருக்கு ஹீரோயினாக நடிக்க ஆசை இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்த ஆசை நிறைவேறுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.