வாரிசு படத்தை புகழ்ந்து தள்ளிய கிரிக்கெட் வீரர்!

  • January 17, 2023 / 01:19 PM IST

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் வாரிசு . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து உள்ளார் . ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

ஜனவரி மாதம் 11 -ஆம் தேதி தமிழில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தீவிரமான ரசிகரான இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி வாரிசு படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார் . அதில் ” வாரிசு….!!! நேர்த்தியான குடும்ப பொழுதுபோக்கு படம் !!! அனைவரின் முகத்திலும் ஒரு புன்னகை ஏற்படுத்தியுள்ளது என்று பதிவிட்டுள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus