சாதி வேண்டாம் என்ற முடிவை எடுத்த பிரபல நடிகை.

  • February 8, 2023 / 10:35 AM IST

நடிகர் தனுஷ் தற்போது வாத்தி படத்தில் நடித்து முடித்து உள்ளார் . இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி இயக்கி உள்ளார். ஜி. வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் நாயகியாக சம்யுக்தா நடித்துள்ளார்.

2015 இல் பாப்கார்ன் என்ற திரைப்படத்தில் மலையாள மொழியில் நடித்துள்ளார். அதன் பிறகு 2018 இல் தீவண்டி திரைப்படத்தில் நடித்தமைக்காக புகழப்பட்டார் . அதே ஆண்டு தமிழில் களரி என்கிற படத்தில் நடித்து இருந்தார். ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நடந்து முடிந்தது. இந்த விழாவில் சம்யுக்தா பங்கேற்றார். அதன் பிறகு சில பேட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ” எனது பெயர் சம்யுக்தா
மட்டும் தான் . “மேனன் ” என்ற சாதி அடைமொழி போட்டுக்கொள்வதை நான் எப்போதும் விரும்பியதில்லை . தயவு செய்து என்னை மேனன் என்று அடையாளப்படுத்தாதீர்கள் . சம்யுக்தா என்று அழைத்தால் போதுமானது என்று தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus