சமீபகாலமாக தென்னிந்தியா சினிமா பிரபலங்கள் இயற்கை எய்துவது திரை உலகினருக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . பழம்பெரும் நடிகர் & இயக்குநர் கே.விஸ்வநாத், பரியேறும் பெருமாள் நடிகர் நெல்லை தங்கராஜ், இயக்குநர் டி.பி.கஜேந்திரன், பாடகி வாணி ஜெயராம் என அடுத்தடுத்து நிகந்த மரணத்தில் இருந்து இன்னும் சினிமா உலகம் மீளவில்லை .
இந்நிலையில் தற்போது மற்றுமொரு பேரிழப்பாக திரைப்படத் தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி 76 வயதில் காலமானார். சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்த காளி மற்றும் கர்ஜனை படங்களை தயாரித்தவர் இவர் .
24 மணி நேரத்தில் படப்பிடிப்பு செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட “சுயம்வரம்” திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் இவர்தான். இவரது இறுதிச் சடங்கு, சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் நடக்கிறது. இவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.