அடேங்கப்பா அந்த ஹீரோவுக்கு ரூ.25 கோடி சம்பளமா?… ஷாக்கான மற்ற ஹீரோக்கள்!

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் தான் அந்த நடிகர். இப்போது அந்த நடிகரின் நடிப்பில் மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ஒரு சயின்ஸ்-ஃபிக்ஷன் படத்துக்கான ஷூட்டிங்கே சமீபத்தில் தான் முடிந்தது.

இன்னொரு படம் முடிந்து ரிலீஸ் தேதியெல்லாம் அறிவித்தார்கள். முதலில் தேர்தலால் தள்ளிப்போனது. அடுத்து கொரோனா இரண்டாம் அலையால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், அந்த நடிகர் அவரது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார்.

இந்த படத்தை தெலுங்கில் ஒரு சூப்பர் ஹிட் காமெடி படத்தை இயக்கிய இயக்குநர் தான் இயக்க உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாக உள்ளதாம். தற்போது, இந்த படத்தில் நடிக்க அந்த ஹீரோவுக்கு ரூ.25 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை கேட்ட மற்ற ஹீரோக்கள் ஷாக் மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

Share.