அதர்வா முரளி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஆவார். நடிகர் முரளியின் மகனும் இயக்குனர் எஸ்.சித்தலிங்கய்யாவின் பேரனுமான அதர்வா தனது திரை வாழ்க்கையை பானா காத்தாடி (2010) மூலம் தொடங்கினார். மேலும் தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான பாலாவின் படமான பரதேசி (2013) படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார் .
பரதேசி படத்திற்கு முன் காதல் த்ரில்லர் படமான முப்பொழுதும் உன் கற்பனைகள் (2012) இல் மாயையால் அவதிப்படும் இளைஞனாக நடித்ததற்காக பாராட்டைப் பெற்றார். இயக்குனர் பாலாவின் தேயிலை தோட்டத்தில் அடிமையாக நடத்தப்பட்ட கிராமப்புற கிராமவாசியாக அவரது பாத்திரம் அவரது திரைப்பயணத்தில் திருப்புமுனை நடிப்பாக அமைந்தது இதற்காக அதர்வாவுக்கு தமிழில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது.
அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் குருதி ஆட்டம். இந்த படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கி இருந்தார் . ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் . இந்த படம் அதர்வாவுக்கு வெற்றியை தரவில்லை . அதர்வா தற்போது அட்ரஸ் , ஒத்தைக்கு ஒத்த , நிறங்கள் மூன்று ஆகிய படங்களில் நடித்து வருகிறார் .மேலும் அவரின் ட்ரிக்கர் படம் விரைவில் வெளியாக உள்ளது , இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அதர்வா தனக்கு மிகவும் பிடித்த மிட் நைட் ஸ்னாக் பிரியாணி என்று தெரிவித்துள்ளார் மேலும் இது எனக்கு இருக்கும் கெட் பழக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .