நடிகர் , தயாரிப்பாளர் , அரசியல்வாதி என தன்னை பல துறைகளில் ஈடுபடுத்திக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின் . 2008 ஆம் ஆண்டு முதன் முதலாக ரெட் ஜெயிண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். அந்த மூலம் குருவி , ஆதவன், மன்மதன் அம்பு , 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களை தயாரித்தார் .
அதன் பிறகு 2012-ஆம் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்கிற படம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் . பிறகு பல தமிழ் படங்களில் நடித்து இருந்தார் . சமீபத்தில் அமைச்சர் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்து இருந்தார் .
இந்நிலையில் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் பினாமி பற்றி பேசி உள்ளார் பத்திரிகையாளர்
சவுக்கு ஷங்கர் . அதில் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் முதன் முதலில் தயாரித்த படம் குருவி . இந்த படத்தை தயாரிக்க குறைந்தபட்சம் 25 கோடி செலவு ஆகி இருக்கும் . 32 வயதில் உதயநிதிக்கு ஏது இவ்வளவு பணம் என்று கேள்வி எழுப்பி உள்ளார் .
ரெட் ஜெயண்ட்க்கு பினாமி அவருடைய தந்தை முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்ற சொல்ல ஏன் தயங்குகிறார்கள். ஸ்டாலினின் சொத்தால் ரெட் ஜெயண்ட் நிறுவனம் உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவில் படம் எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஆசைப்பட்டார். அதனால் தான் தயாரிப்பு நிறுவனம் வைத்துக் கொடுத்தேன் என்று ஸ்டாலினே சொன்னதாக இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் ஊடகங்களில் சொல்லி உள்ளார். ஆகையால் ரெட் ஜெயண்ட் என்ற மிகப்பெரிய நிறுவனத்திற்கு பின்னால் இருப்பது தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் என சவுக்கு சங்கர் கூறியுள்ளார் .