கமலின் ‘விக்ரம்’யில் வில்லனாக நடிக்க நோ சொன்ன லாரன்ஸ்… அடுத்த சாய்ஸ் இந்த ஹீரோவாமே!

  • April 6, 2021 / 04:06 PM IST

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகப்போகிறது. அதற்கான வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்ட ‘விக்ரம்’ டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. சமீபத்தில், பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனுக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாப்புலர் ஹீரோவும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார் என்று கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது.

மேலும், இந்த படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸுக்கு ரூ.7 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது. தற்போது, சில காரணங்களால் ராகவா லாரன்ஸ் இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். ஆகையால், அவருக்கு பதிலாக அந்த ரோலில் நடிக்க பாப்புலர் ஹீரோக்களில் ஒருவரான விஷாலிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus