ரஜினியை இயக்க ஆசைப்படும் விஜய் படத்தின் இயக்குனர் !

  • May 24, 2022 / 10:09 PM IST

மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

நடிகர் சூர்யா இந்த படத்தில் நடிப்பதை ரகசியமாக வைத்து இருந்தார்கள் படக்குழுவினர் .ஆனால் இணையத்தில் இவர் நடித்து கொண்டு இருக்கும் வீடியோ வைரல் ஆனது . இதனால் இது அனைவருக்கும் தெரிய வந்தது . இந்நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் வெளியாக உள்ளது .

விக்ரம் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து நடிகர் விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்க இருக்கிறார் . இந்நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினி மற்றும் ரசிகர் அஜித்தை வைத்து படம் இயக்க தனக்கு ஆசை உள்ளது என்று தெரிவித்துள்ளார் . லோகேஷின் இந்த ஆசை நிச்சயம் நிறைவேறும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus