வாரிசு படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இவர் தான் – தில் ராஜு

  • December 17, 2022 / 01:29 PM IST

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரபு , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் ,குஷ்பு , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது . தமன் இசையில் ரஞ்சிதமே என்கிற பாடலை நடிகர் விஜய் மற்றும் மானசி இணைந்து பாடி இருந்தனர் . வெளியான முதல் இந்த பாடல் விஜய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இதனை தொடர்ந்து தீ தளபதி என்கிற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தமிழ்நாட்டில் வருகிற பொங்கல் தினத்தன்று இந்த படம் வெளியாக உள்ளது என்று படக்குழு அறிவித்து இருந்தது .

இந்நிலையில் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் டிசம்பர் 24 -ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ளது . அதனை தொடர்ந்து ஆந்திராவில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது . இது இரு பக்கம் இருக்க படத்தின் தயாரிப்பாளார் தில் ராஜு வாரிசு படத்தில் முதலில் மகேஷ் பாபுவை நடிக்க வைக்க முயன்றேன் ஆனால் மகேஷ் பாபுவிடம் கால் ஷீட் இல்லாத காரணத்தால் தான் அவரால் வாரிசு படத்தில் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus