ஆண் குழந்தைக்கு தந்தையான சூப்பர் சிங்கர் பிரபலம்..

  • February 17, 2023 / 08:38 PM IST

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதிலிருந்து பல நட்சத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர். பல சீசன்கள் கடந்தும் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது .

அப்படிப்பட்ட சூப்பர்ஹிட் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானவர் தான் அஜய் கிருஷ்ணா. இவர் பாடும் பாடல்கள் மட்டுமின்றி உதித் நாராயணன் குரலில் பாடுவதை கேட்க தான் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறார்கள்.


இந்நிலையில் இவருக்கு கடந்த ஆண்டு ஜெஸி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது இந்த காதல் ஜோடிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அஜய் கிருஷ்ணாவிற்கும், ஜெஸிக்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்..

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus