கார்த்திக்கு கதை சொன்ன பிளாக்பஸ்டர் இயக்குநர் !

  • February 21, 2023 / 12:22 AM IST

நடிகர் கார்த்தி நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் சர்தார் . இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கி உள்ளார் . ராஷி கண்ணா , ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் . மேலும் நடிகை லைலா முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் . ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது .

இந்நிலையில் நடிகர் கார்த்தி நடிக்கும் அவரது 25 படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது .
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜப்பான் என்று தலைப்பு வைத்துள்ளனர் . குக்கூ , ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராஜூமுருகன் இந்த படத்தை இயக்கி வருகிறார் . அனு இம்மானுவேல் இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் . மேலும் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் .

இந்நிலையில் நடிகர் கார்த்தி 96 பட இயக்குனர் பிரேம் குமாரிடம் கதை கேட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . 2டி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்றும் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus