இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் . இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அசுரன் . இந்த படம் பெரிய அளவில் பெற்றது . அசுரன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கி வருகின்ற படம் விடுதலை . இந்த படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார் . விரைவில் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது .
இந்த படத்திற்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்கிற படத்தை இயக்க உள்ளார் . கலைப்புலி எஸ் . தாணு இந்த படத்தை தயாரிக்கிறார் . ஏப்ரல் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது .
வாடிவாசல் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் வடசென்னை 2 படத்தை இயக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டாலும் தற்போது புதிய செய்தி கோலிவுட் வட்டாரத்தில் உலாவி வருகிறது . வாடிவாசல் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது . இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது என்றும் முதல் பாகத்தில் என்.டி.ஆர் நாயகனாக நடிப்பார் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த செய்தி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களிடேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது .