இந்த வாரம் ‘பிக் பாஸ் 6’-லிருந்து எலிமினேட்டான மணிகண்டா ராஜேஷுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் இவ்ளோவா?

  • January 2, 2023 / 07:57 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு (2022) ஜனவரி 16-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இந்த சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னர் என்றும், பிரியங்கா ரன்னர் அப் என்றும் அறிவிக்கப்பட்டது.

‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 6 கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 9-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா மகாலக்ஷ்மி, ராம் ராமசாமி, ADK, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி, கதிரவன், குயின்ஸி, நிவாஷினி, தனலக்ஷ்மி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் மைனா நந்தினி என்ட்ரியானார். கடந்த ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி ஜி.பி.முத்து சில காரணங்களால் வெளியேறி விட்டார். பின், அடுத்தடுத்த வாரங்களில் சாந்தி, அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்ஸி, ராம் ராமசாமி, ஆயிஷா, ஜனனி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர்.

கடந்த வாரம் டிசம்பர் 25-ஆம் தேதி தனலக்ஷ்மி எலிமினேட் செய்யப்பட்டார். நேற்று (ஜனவரி 1-ஆம் தேதி, 2023) மணிகண்டா ராஜேஷ் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, 84 நாட்கள் இந்த ஷோவில் கலந்து கொண்ட மணிகண்டா ராஜேஷுக்கு ரூ.19.80 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus