சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் லிஸ்ட் இதோ…
1.அநீதி :
தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அர்ஜுன் தாஸ். இவர் ஹீரோவாக நடித்த ‘அநீதி’ திரைப்படம் கடந்த ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
இப்படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வசந்த பாலன் இயக்கியுள்ளார். இதில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வனிதா விஜயக்குமார், காளி வெங்கட், அறந்தாங்கி நிஷா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் பிரபல OTT தளமான ‘ஆஹா’வில் ரிலீஸாகியுள்ளது.
2.மை3 :
தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் எம்.ராஜேஷ். இவர் இயக்கியுள்ள புதிய வெப் சீரிஸ் ‘மை3’ (MY3). சயின்ஸ்-ஃபிக்ஷன் ஜானர் சீரிஸான இதில் ஹன்ஷிகா மோத்வானி, ஷாந்தனு, முகேன் ராவ் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் ஜனனி அய்யர், சுப்பு பஞ்சு, ராமர், அறந்தாங்கி நிஷா, அபிஷேக், ஷக்தி, தங்கதுரை ஆகியோர் நடித்துள்ளனர். இவ்வெப் சீரிஸ் பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ல் ரிலீஸாகியுள்ளது.
3.டைனோசர்ஸ் :
உதய் கார்த்திக் ஹீரோவாக நடித்திருக்கும் கேங்ஸ்டர் படம் ‘டைனோசர்ஸ்’ (DIE NO SIRS). இந்த படத்தை இயக்குநர் M.R.மாதவன் இயக்கியுள்ளார். இதில் உதய் கார்த்திக்கு ஜோடியாக சாய் ப்ரியா தேவா நடித்துள்ளார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் ஸ்ரீனி, மணிக்ஷா, கவின் ஜெயபாபு, ஜானகி சுரேஷ், யாமினி சந்தர், ரமணா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு போபோ சசி இசையமைத்துள்ளார், ஜோன்ஸ்.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் பிரபல OTT தளமான ‘சிம்ப்ளி சவுத்’ல் ரிலீஸாகியுள்ளது.