இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகவுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

  • August 23, 2023 / 02:18 PM IST

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகவுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ…

1.பீட்சா 3 :

அஷ்வின் ககுமானு ஹீரோவாக நடித்திருக்கும் ஹாரர் ஜானர் படம் ‘பீட்சா 3’. இந்த படத்தை இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் பவித்ரா மாரிமுத்து, கெளரவ் நாராயணன், அபிஷேக் ஷங்கர், காளி வெங்கட், அனுபமா குமார், ரவீனா தாஹா, சுபிக்ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை நாளை (ஆகஸ்ட் 24-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘சிம்ப்ளி சவுத்’ல் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

2.பிளாக் & வொயிட் :

கார்த்திக் ராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘பிளாக் & வொயிட்’. இந்த படத்தை இயக்குநர் எஸ்.தீக்ஷி இயக்கியுள்ளார். இதில் கார்த்திக் ராஜுக்கு ஜோடியாக தீபா நடித்துள்ளார். இதற்கு குணா பாலசுப்ரமணியம் இசையமைத்துள்ளார், ஃபரூக்.ஜே.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், தமிழரசன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படத்தை வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘ஜீ5’ல் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

3.இன்ஃபினிட்டி :

நட்டி ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘இன்ஃபினிட்டி’. இந்த படத்தை இயக்குநர் சாய் கார்த்திக் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் வித்யா பிரதீப், முனிஷ்காந்த், சார்லஸ் வினோத், முருகானந்தம், வினோத் சாகர், ஜீவா ரவி, ஆதவன், சிந்துஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை இந்த வாரம் பிரபல OTT தளமான ‘சிம்ப்ளி சவுத்’ல் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus