2010 ஆம் ஆண்டு எஸ்.பி.பி சரண் தயாரிப்பில் “ஆரண்யகாண்டம்” திரைப்படத்தை இயக்கியவர் தியாகராஜ குமார ராஜா. இதுவே இவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம்.
படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை என்றாலும் சினிமா பிரியர்களின் மனதில் இந்தப் படம் இன்றும் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” திரைப்படத்தின் கதை உருவாக்கத்தில் இவர் பங்கேற்றிருக்கிறார்.
ஆரண்யகாண்டம் படத்தை தொடர்ந்து எட்டு வருடங்களுக்குப் பிறகு இவரது இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் “சூப்பர் டீலக்ஸ்”. இந்தப் படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்த விஜய் சேதுபதி தன் நடிப்பிற்காக சிறந்த பாராட்டுகளைப் பெற்றார்.
மேலும் இந்தப் படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்கள்.
யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இவரது முதல் படத்திற்கும் இவர்தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல் ரீதியாக இந்தப் படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது செய்தி என்னவென்றால் இதே கூட்டணி மீண்டும் தியாகராஜா குமார ராஜா இயக்கத்தில் இணையவுள்ளது. இதற்கு பகத் பாசில் ஒப்புக் கொண்டுள்ளாராம். இந்த கூட்டணியில் மீண்டும் எப்போது படம் வெளிவரும் என்று அதிகாரபூர்வமான தகவலுக்கு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.