துணிவு படத்தில் எத்தனை பாடல்கள் தெரியுமா ?

  • November 10, 2022 / 12:20 AM IST

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .

2023 -ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுகிறார் . பாடல் காட்சிகள் மட்டும் இன்னும் படமாக்க படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது . தற்போது டப்பிங் பணிகள் விரைவாக நடந்து வருகிறது . நடிகர் அஜித் தனது டப்பிங் பணிகளை முடித்து விட்டார் .

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது . துணிவு படத்தின் முதல் பாடல் பற்றின தகவல் வெளியாகி உள்ளது . ஜிப்ரான் இசையில் ” சில்லா சில்லா ” என்கிற பாடலை அனிருத் பாடியுள்ளார் . இந்த பாடலை வைசாக் என்பவர் எழுதி உள்ளார் . சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘ காக்கா கதை ‘ பாடலை எழுதியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது . துணிவு படத்தின் இந்த புதிய அப்டேட் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது .

இது ஒரு பக்கம் இருக்க துணிவு படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus