” துணிவு ” படத்தின் புதிய ஓ .டி. டி. வெளியீட்டு தேதி அறிவிப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்.

  • February 3, 2023 / 01:01 PM IST

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து உள்ளார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .


துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது . இந்நிலையில் ஜனவரி 11 அன்று நள்ளிரவு 1 மணிக்கு வெளியான துணிவு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குநர் எச்.வினோத்திற்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் மேலும் பேங்க் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் போன்ற புதிய கருத்துக்களை மக்களுக்கு எடுத்து காட்டி உள்ளார் இயக்குநர் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தனர் . .

இந்நிலையில் துணிவு படம் பிப்ரவரி மாதம் 8 -ம் தேதி நெட்பிலிக்ஸ் ஒ. டி. டி. -யில் வெளியாகும் என்ற அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus