பாலிவுட் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் டைகர் ஷெராஃப். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஆக்ஷன் படம் ‘கண்பத்’. இந்த படத்தை இயக்குநர் விகாஸ் பாஹ்ல் இயக்கியுள்ளார்.
இதில் டைகர் ஷெராஃப்புக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அமிதாப் பச்சன், ரகுமான், கிரீஸ் குல்கர்னி, ஸ்ருதி மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதன் பாடல்களுக்கு விஷால் மிஸ்ரா, அமித் த்ரிவேதி, வொயிட் நாய்ஸ் ஸ்டுடியோஸ், Dr.ஜீயஸ் ஆகியோர் இசையமைத்துள்ளனர், சலீம் சுலைமான் பின்னணி இசையமைத்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. படத்தை நாளை (அக்டோபர் 20-ஆம் தேதி) ஹிந்தி மொழி மட்டுமில்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இப்படம் உலக அளவில் ரூ.240 கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகும் என்று தகவல் கிடைத்துள்ளது.