நம்ம ‘டிக் டாக்’ இலக்கியாவா இது?… ரசிகர்களை ஷாக்காக்கிய ஸ்டில்ஸ்!

திரைப்படங்களில் நடித்து ஃபேமஸாவதற்கு முன்பே ‘டிக் டாக்’ மூலம் அதிகம் கவனம் ஈர்த்தவர் இலக்கியா. படு கவர்ச்சியான ‘டிக் டாக்’ வீடியோஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

கடந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் நிறைவடைந்த ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4-யிலும் இலக்கியா கலந்து கொள்ளவிருக்கிறார் என்று முதலில் சொல்லப்பட்டது. பின், இலக்கியாவே தான் கலந்து கொள்ளவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்போது, இலக்கியா சினிமாவிலும் என்ட்ரியாகியுள்ளார். இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகும் முதல் படம் ‘நீ சுடத்தான் வந்தியா?’. இந்த படத்தை கே.துரைராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.

இதில் அருண் குமார் என்பவர் ஹீரோவாக நடித்ததுடன், அவரே தனது ‘அல்பைன் மீடியா’ நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். கடந்த ஆண்டு (2021) மார்ச் மாதம் 10-ஆம் தேதி இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர். சமீபத்தில், இந்த படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் அளித்தனர்.

விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறு வயதில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்லை பார்த்த ரசிகர்கள் நம்ம ‘டிக் டாக்’ இலக்கியாவா இது? என ஆச்சர்யப்படுகின்றனர்.

Share.