பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தை பார்த்துட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா?
August 2, 2022 / 12:40 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி, ஹீரோவாக நடித்து, தயாரித்திருக்கும் புது படமான ‘இரவின் நிழல்’ கடந்த ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. ஒரே ஷாட்டில் பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘இரவின் நிழல்’ படத்தில் ஒரு நான் லீனியர் திரைக்கதையை ஒரே ஷாட்டில் படமாக்கி புதிய சாதனை படைத்திருக்கிறார் பார்த்திபன்.
இதில் மிக முக்கிய ரோல்களில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரியங்கா ரூத், பிரிகிடா, சிநேகா குமார், ஆனந்த் கிருஷ்ணன், சந்துரு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தை பார்த்து ரசித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “எதிலும் தனிப்பாணி – அதுதான் பார்த்திபன்! ‘ஒத்த செருப்பு’-க்குப் பிறகு ஒத்த ஷாட் படம்!
‘இரவின் நிழல்’ படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்! Nonlinear single shot படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்!” என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பார்த்திபன் ட்விட்டரில் “Non-linear-ல், நான் சீனியர் எனத் தமிழகமே பாராட்டிவிட்டது. முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி. பாராட்டப்படும் போது பட்டக் கடனும் படும் கஷ்டமும் தற்காலிகமாக தற்கொலை செய்துக் கொள்கின்றன. இனி பார்… பார்க்க …. பாராட்டும்” என்று கூறியுள்ளார்.
Non-linear-ல்,நான் சீனியர் எனத் தமிழகமே பாராட்டிவிட்டது.முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி.பாராட்டப்படும் போது பட்டக் கடனும் படும் கஷ்டமும் தற்காலிகமாக தற்கொலை செய்துக் கொள்கின்றன.இனி
பார்…
பார்க்க ….
பாராட்டும் https://t.co/e78tlsp4IS
எதிலும் தனிப்பாணி – அதுதான் @rparthiepan!#OthaSeruppu-க்குப் பிறகு ஒத்த ஷாட் படம்!#IravinNizhal படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்!
Nonlinear single shot படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்! pic.twitter.com/LN6KGOZOWL