தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘மாமன்னன்’. இப்படம் இன்று (ஜூன் 29-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.
இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், ரவீனா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இதனை உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மூலம் தயாரித்துள்ளார். தற்போது, இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் “மாமன்னனை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் ப்ரியத்தையும் சமர்பிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
மாமன்னனை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் திரு . @mkstalin ஐயா அவர்களுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் ப்ரியத்தையும் சமர்பிக்கிறோம் ❤️❤️❤️ @Udhaystalin @arrahman @KeerthyOfficial @RedGiantMovies_ #MAAMANNAN pic.twitter.com/1snE2uBQeF
— Mari Selvaraj (@mari_selvaraj) June 29, 2023