திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி… தமிழக அரசு அறிக்கை!

  • June 21, 2021 / 11:01 AM IST

கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் இப்போது அதிகமாக இருப்பதால், மக்கள் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிர் இழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர். இதனால் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது, அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது, தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் “திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த அனுமதிக்கப்படும். படப்பிடிப்பில் பங்கேற்கும் பணியாளர்கள் / கலைஞர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும்.

படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் அனுமதிக்கப்படும். திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus