வெளியான 7 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட்!

தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோக்கள். இதுவரை தமிழில் வெளிவந்த படங்களில் முதல் 7 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ…

1.சர்கார் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் ‘சர்கார்’. இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 7 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.102.05 கோடி வசூல் செய்தது.

2.பிகில் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிகில்’. இந்த படத்தை இயக்குநர் அட்லி இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 7 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.101.10 கோடி வசூல் செய்தது.

3.வலிமை :

அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியான படம் ‘வலிமை’. இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 7 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100.10 கோடி வசூல் செய்தது.

4.மாஸ்டர் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு (2021) பொங்கலுக்கு வெளியான படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 7 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.96.20 கோடி வசூல் செய்தது.

5.மெர்சல் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2017-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மெர்சல்’. இந்த படத்தை இயக்குநர் அட்லி இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 7 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.89 கோடி வசூல் செய்தது.

6.அண்ணாத்த :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு (2021) வெளியான படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 7 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.75.15 கோடி வசூல் செய்தது.

7.விஸ்வாசம் :

‘தல’ அஜித் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘விஸ்வாசம்’. இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 7 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.67.20 கோடி வசூல் செய்தது.

8.பாகுபலி 2 :

பிரபாஸ் நடிப்பில் 2017-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பாகுபலி 2’. இந்த படத்தை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 7 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.67 கோடி வசூல் செய்தது.

9.2.0 :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் ‘2.0’. இந்த படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 7 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.66 கோடி வசூல் செய்தது.

10.பேட்ட :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பேட்ட’. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 7 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.58.30 கோடி வசூல் செய்தது.

Share.