• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்கள் அவர்களது புதிய படங்களுக்கு வாங்கும் சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா?

தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்கள் அவர்களது புதிய படங்களுக்கு வாங்கும் சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா?

  • July 13, 2022 / 09:57 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்கள் அவர்களது புதிய படங்களுக்கு வாங்கும் சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா?

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோக்கள். தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்கள் அவர்களது புதிய படங்களுக்கு வாங்கும் சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா?

1.ரஜினிகாந்த் – ஜெயிலர் :

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்க உள்ளார்.

‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளாராம். இந்த படத்தில் ரஜினிக்கு மகளாக பிரியங்கா மோகனும், மிக முக்கிய ரோலில் கன்னட நடிகர் ஷிவராஜ்குமாரும் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.

இதன் ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் மாதம் ஆரம்பிக்கவும், படத்தை அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யவும் ப்ளான் போட்டுள்ளனர். இந்த படத்துக்காக நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு ரூ.150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

2.கமல்ஹாசன் – விக்ரம் 3 :

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, செம்பன் வினோத் ஜோஸ் இருவரும் வில்லன் ரோல்களில் நடித்திருந்தார்கள். மேலும், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், மைனா நந்தினி, ஜாஃபர் சாதிக், ஷிவானி நாராயணன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர்.

கெஸ்ட் ரோலில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடித்திருந்தார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு (2023) ‘விக்ரம்’ படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க கமலும், லோகேஷும் திட்டமிட்டுள்ளனர். ‘விக்ரம் 3’-யில் நடிக்க கமலுக்கு ரூ.130 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

3.விஜய் – வாரிசு :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது விஜய் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘வாரிசு’ படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், சம்யுக்தா ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2023) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்த படத்துக்காக நடிகர் விஜய்-க்கு ரூ.118 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

4.அஜித் – AK61 :

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.

இப்படம் இந்த ஆண்டு (2022) பிப்ரவரி 24-ஆம் தேதி ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்கிறாராம்.

இதில் அஜித்துக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கிறார்கள். இதற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்துக்காக நடிகர் அஜித்துக்கு ரூ.60 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

5.சூர்யா – வாடிவாசல் :

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் பாலா இயக்கும் ‘வணங்கான்’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம் 3’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வாடிவாசல்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2020-ஆம் ஆண்டு வெளி வந்தது.

இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி.எஸ்.தாணு தனது ‘V கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இதற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஜாக்கி கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார். சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற நாவலை மையமாக வைத்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார் வெற்றிமாறன்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போகிறார் என்ற செய்தி வந்ததில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு சென்று விட்டது. இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் இயக்குநர் அமீர் நடிக்கவிருக்கிறார். 120 நாளில் இப்படத்தை எடுத்து முடிக்க ப்ளான் போட்டுள்ளாராம் இயக்குநர் வெற்றிமாறன். சமீபத்தில், இப்படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடைபெற்றது. இந்த படத்துக்காக நடிகர் சூர்யாவுக்கு ரூ.28 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #ajith - ak61
  • #jailer
  • #kamal - vikram 3
  • #rajini - jailer
  • #suriya - vaadivaasal

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vaadivaasal : ‘வாடிவாசல்’ ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த வெற்றிமாறன்… ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட்டான சூர்யா ரசிகர்கள்!

Vaadivaasal : ‘வாடிவாசல்’ ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த வெற்றிமாறன்… ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட்டான சூர்யா ரசிகர்கள்!

Vaadivaasal : சூர்யாவின் ‘வாடிவாசல்’-க்காக அமீரை நேரில் சந்தித்து பேசிய வெற்றிமாறன்… வைரலாகும் ஸ்டில்!

Vaadivaasal : சூர்யாவின் ‘வாடிவாசல்’-க்காக அமீரை நேரில் சந்தித்து பேசிய வெற்றிமாறன்… வைரலாகும் ஸ்டில்!

2023-ல் வெளியாகி முதல் 20 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 20 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

Box Office Collection : 2023-ல் வெளியாகி முதல் 2 வாரத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

Box Office Collection : 2023-ல் வெளியாகி முதல் 2 வாரத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி ஒரே வாரத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி ஒரே வாரத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 5 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 5 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version