Box Office Collection : 2023-ல் வெளியாகி முதல் நாளே அதிக வசூல் செய்த டாப் 5 இந்திய படங்களின் லிஸ்ட்!

  • December 7, 2023 / 10:51 AM IST

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோக்கள். இதுவரை இந்த ஆண்டு (2023) வெளிவந்த இந்திய படங்களில் முதல் நாளே உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ…

1.லியோ :

‘தளபதி’ விஜய் நடிப்பில் இந்த ஆண்டு (2023) அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான படம் ‘லியோ’. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி, ‘பிக் பாஸ்’ ஜனனி, மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.148.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

2.ஜவான் :

ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு (2023) செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியான படம் ‘ஜவான்’. இந்த படத்தை இயக்குநர் அட்லி இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருந்தார். இப்படம் வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.129.6 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

3.அனிமல் :

ரன்பீர் கபூர் நடிப்பில் இந்த ஆண்டு (2023) டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான படம் ‘அனிமல்’. இந்த படத்தை இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ராஷ்மிகா மந்தனா, அணில் கபூர், பாபி தியோல், பப்லு ப்ரித்விராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.116 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

4.பதான் :

ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு (2023) ஜனவரி 25-ஆம் தேதி வெளியான படம் ‘பதான்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருந்தார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ஜான் ஆப்ரஹாம் நடித்திருந்தார். கெஸ்ட் ரோலில் சல்மான் கான் நடித்திருந்தார். இப்படம் வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.108 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

5.ஆதிபுருஷ் :

பிரபாஸ் நடிப்பில் இந்த ஆண்டு (2023) ஜூன் 16-ஆம் தேதி வெளியான படம் ‘ஆதிபுருஷ்’. இந்த படத்தை இயக்குநர் ஓம் ராவத் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் க்ரித்தி சனோன், சயிஃப் அலிகான், சன்னி சிங் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.105 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus