வெளியான 3 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட்!

  • November 17, 2021 / 07:06 PM IST

திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ படம் வெளியானது. இதில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, இயக்குநர் சிவா இயக்கியிருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடித்திருந்தது.

ரஜினிக்கு எதிராக மோதும் வில்லன் ரோல்களில் ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், அபிமன்யு சிங் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் பாலா, சதீஷ், சூரி, சத்யன், வேல ராமமூர்த்தி, அர்ஜை, ‘கபாலி’ விஸ்வநாத், லிவிங்க்ஸ்டன், பாண்டியராஜன் ஆகியோர் நடித்திருந்தனர்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த நவம்பர் 4-ஆம் தேதி முதல் நவம்பர் 6-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் ரூ.58.5 கோடி வசூல் செய்துள்ளதாம். இதுவரை தமிழில் வெளிவந்த படங்களில் முதல் 3 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ…

1.சர்கார் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் ‘சர்கார்’. இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.66 கோடி வசூல் செய்தது.

2.பிகில் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிகில்’. இந்த படத்தை இயக்குநர் அட்லி இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.61.7 கோடி வசூல் செய்தது.

3.அண்ணாத்த :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.58.5 கோடி வசூல் செய்துள்ளது.

4.மாஸ்டர் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் இந்த ஆண்டு (2021) பொங்கலுக்கு வெளியான படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனராஜ் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.57.2 கோடி வசூல் செய்தது.

5.மெர்சல் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2017-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மெர்சல்’. இந்த படத்தை இயக்குநர் அட்லி இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.52.8 கோடி வசூல் செய்தது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus