வெளியான முதல் நாளே அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட்!

  • October 13, 2022 / 04:19 PM IST

தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோக்கள். இதுவரை தமிழில் வெளிவந்த படங்களில் முதல் நாளே அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ…

1.2.0 :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் ‘2.0’. இந்த படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.94 கோடி வசூல் செய்தது.

2.கபாலி :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கபாலி’. இந்த படத்தை இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.91 கோடி வசூல் செய்தது.

3.பீஸ்ட் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.84 கோடி வசூல் செய்தது.

4.பொன்னியின் செல்வன் (முதல் பாகம்) :

பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இந்த ஆண்டு (2022) செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியான படம் ‘பொன்னியின் செல்வன்’ (முதல் பாகம்). இதில் ‘ஜெயம்’ ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.80 கோடி வசூல் செய்தது.

5.சர்கார் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் ‘சர்கார்’. இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.73 கோடி வசூல் செய்தது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus