சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “வெண்ணிலா கபடி குழு”. இந்த திரைப்படத்தில் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடியை மையமாகக்கொண்டு திரைக்கதை நகர்ந்திருக்கும். இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் ஜீவா, முண்டாசுப்பட்டி, நேற்று இன்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சிலுக்குவார் பட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல இடத்தை பிடித்தார்.
தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வந்த விஷ்ணு விஷாலுக்கு ஒரு பெரிய மைல்கல்லாக அமைந்த படம் “ராட்சசன்”. ராம்குமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தை ஆக்சிஸ் பிலிம் ஃபேக்டரி தயாரித்திருந்தார்கள்.
இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் அமலாபால் நடித்திருந்தார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். தனது திரில்லர் கதைக்களத்திற்காக பெரிதும் பாராட்டப்பட்ட இந்த திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு பதில் வேறு ஒருவர் தான் நடிக்கவிருந்தாராம்.
இந்த படத்தின் இயக்குனர் ராம்குமார் முன்னணி நடிகர்களிடம் முதலில் இந்த கதையை கூறியதாகவும, ஆனால் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
இதைவிட சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் “ராட்சசன்” படத்தின் கதையை சுமார் 17 முன்னணி நடிகர்களிடம் கூறியிருக்கிறாராம் இயக்குனர் ராம்குமார்.ஆனால் கடைசியில் நடிகர் விஷ்ணு விஷால் ஒப்புக்கொண்டு, பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது இந்த திரைப்படம்.