AK64 : ‘AK64’-ஐ இயக்கும் இயக்குநர் சிவா… இதில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

  • February 5, 2024 / 03:42 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ கடந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

‘விடாமுயற்சி’-க்கு பிறகு அஜித்தின் 63-வது படத்தை ‘மார்க் ஆண்டனி’ பட புகழ் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிக்கிறது. இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஷூட்டிங்கை வருகிற ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 64-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சிவா இயக்கவிருக்கிறார். ஏற்கனவே, சிவா இயக்கத்தில் அஜித் ‘வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம்’ ஆகிய படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அஜித் – சிவா கூட்டணியில் உருவாகும் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். தற்போது, இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus