காதலர் மீது செம காண்டில் இருக்கும் முன்னணி நடிகை… எல்லாத்துக்கும் காரணம் அந்த 2 படங்கள்தான்!
April 26, 2021 / 05:06 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த நம்பர் நடிகை. இப்போது ரௌடி பட இயக்குநரை காதலித்து வருகிறார். சமீபத்தில், இவர்களின் திருமணம் தொடர்பாக அந்த இயக்குநர் அளித்த பேட்டி ஒன்றில் “எங்களுக்கு சில ப்ளான்ஸ் இருக்கு. அதை எல்லாம் முதல்ல முடிக்கணும். இப்போதைக்கு நாங்க எங்க வேலையில தான் அதிக கவனம் செலுத்துறோம். எப்போ நாங்க பண்ணிட்டு இருக்குற லவ் போர் அடிக்குதோ, அப்போ தான் திருமணம் செய்து கொள்வோம்.
அந்த டைம் நாங்களே அதிகாரப்பூர்வமா அறிவிப்போம்” என்று கூறியிருந்தார். இப்போது அந்த நம்பர் நடிகை – ரௌடி பட இயக்குநர் காம்போவில் ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. இதில் மக்களுக்கு மிகவும் பிடித்த அந்த டாப் ஹீரோ நடிக்கிறார். இதில் இன்னொரு நடிகையும் நடித்து கொண்டிருக்கிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது தவிர அந்த நம்பர் நடிகையின் நடிப்பில் இரண்டு தமிழ் படங்களும், ஒரு மலையாள படமும் லைன் அப்பில் இருக்கிறது.
சமீபத்தில், நம்பர் நடிகையின் பணத்தை எல்லாம் அந்த ரௌடி இயக்குநர் வாங்கி இரண்டு சின்ன பட்ஜெட் படங்களின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றினார். ஆனால், இப்போது இருக்கும் கொரோனா இரண்டாம் அலை சூழலில் திரையரங்குகளையே எப்போது மூடப்போகிறார்கள் என்று தெரியாமல் இருப்பதால், அங்கு ரிலீஸ் செய்ய வழியில்லை. OTT-யில் இவர்கள் சொல்லும் அதிக விலைக்கு வாங்க மறுக்கிறார்களாம். இதனால் ரௌடி இயக்குநர் மீது செம காண்டில் இருக்கிறாராம் நம்பர் நடிகை.