“இப்போதைக்கு திருமணம் இல்லை”… முன்னணி நடிகை எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த நம்பர் நடிகை. இப்போது ரௌடி பட இயக்குநரை காதலித்து வருகிறார். சமீபத்தில், இவர்களின் திருமணம் தொடர்பாக அந்த இயக்குநர் அளித்த பேட்டி ஒன்றில் “எங்களுக்கு சில ப்ளான்ஸ் இருக்கு. அதை எல்லாம் முதல்ல முடிக்கணும்.

இப்போதைக்கு நாங்க எங்க வேலையில தான் அதிக கவனம் செலுத்துறோம். எப்போ நாங்க பண்ணிட்டு இருக்குற லவ் போர் அடிக்குதோ, அப்போ தான் திருமணம் செய்து கொள்வோம். அந்த டைம் நாங்களே அதிகாரப்பூர்வமா அறிவிப்போம்” என்று கூறியிருந்தார். இப்போது அந்த நம்பர் நடிகை – ரௌடி பட இயக்குநர் காம்போவில் ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. இதில் மக்களுக்கு மிகவும் பிடித்த அந்த டாப் ஹீரோ நடிக்கிறார். இதில் இன்னொரு நடிகையும் நடித்து கொண்டிருக்கிறார். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது.

Top Actress Decision About Her Marriage1

இது தவிர அந்த நம்பர் நடிகையின் நடிப்பில் இரண்டு தமிழ் படங்களும், ஒரு மலையாள படமும் லைன் அப்பில் இருக்கிறது. இப்படங்களை முடித்த பிறகாவது நடிகை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பே இல்லை என்று தகவல் கிடைத்துள்ளது. ஏனெனில், நம்பர் நடிகை சமீபத்தில் தனது கால்ஷீட் டைரியில் இணைய மேலும் ஐந்து புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

Share.