ஹிந்தியில் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’-ஐ ரீமேக் செய்யும் கெளதம் மேனன்… ஹீரோ யார் தெரியுமா?

  • November 7, 2023 / 07:02 PM IST

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். இவரின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘என்னை அறிந்தால்’.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அனுஷ்கா ஷெட்டி, அருண் விஜய், அனிகா சுரேந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தற்போது, இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கையும் கெளதம் மேனனே இயக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் ஹீரோவாக பாலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சல்மான் கான் நடிக்கவுள்ளாராம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus