KH234 : கமல் – மணிரத்னம் இணையும் ‘KH234’… வில்லன் ரோலில் மிரட்டப்போவது இந்த முன்னணி பாலிவுட் நடிகரா?

  • October 27, 2023 / 09:22 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ கடந்த ஆண்டு (2022) ரிலீஸானது. இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது.

இப்போது கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, பிரபாஸின் ‘கல்கி 2898 AD’, இயக்குநர் மணிரத்னம் படம், இயக்குநர் ஹெச்.வினோத் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் மணிரத்னம் இயக்கும் படம் கமலின் கேரியரில் 234-வது படமாம்.

இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ‘ஜெயம்’ ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதனை ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் – ரெட் ஜெயன்ட் மூவிஸ் – மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறதாம். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் வீடியோவுக்கான ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது, இதை வருகிற நவம்பர் 7-ஆம் தேதி கமலின் பர்த்டே ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் முன்னணி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus