லவ் ஆந்தாலஜி படம்… முன்னணி இயக்குநருக்கு ஜோடியாக அமலா பால்!

  • September 11, 2020 / 10:58 PM IST

தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ‘LKG, கோமாளி, பப்பி, எனை நோக்கி பாயும் தோட்டா, சீறு’ போன்ற பல தமிழ் படங்கள் வெளி வந்துள்ளது. இப்போது, இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ‘சுமோ, ஜோஷ்வா, மூக்குத்தி அம்மன், துருவ நட்சத்திரம்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இதற்கு ‘குட்டி லவ் ஸ்டோரி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. ஆந்தாலஜி படமான இதில் நான்கு குறும்படங்கள் இருக்கிறதாம். பிரபல இயக்குநர்களான கெளதம் வாசுதேவ் மேனன், வெங்கட் பிரபு, ஏ.எல்.விஜய், நலன் குமாரசாமி ஒவ்வொரு குறும்படத்தையும் இயக்குகின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் குறும்படத்தில் வருண் – ‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வாலும், இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் குறும்படத்தில் அமிதாஷ் பிரதான் – மேகா ஆகாஷும், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் குறும்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். தற்போது, இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் குறும்படத்தில் அவரே ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக அமலா பால் நடிப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus