“போன் பண்ணாக்கூட எடுக்கிறதில்ல”… இளம் இசையமைப்பாளரால் கடுப்பான பிரம்மாண்ட இயக்குநர்!

  • March 24, 2021 / 07:28 PM IST

தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் அந்த இளம் இசையமைப்பாளர். டாப் ஸ்டாரின் உறவினரான இவர், டாப் ஸ்டாரின் மருமகன் ஹீரோவாக நடித்த நம்பர் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் இவரை வேர்ல்ட் லெவலில் ஃபேமஸாக்கியது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகைக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கியதும் இந்த இசையமைப்பாளர் தானாம். நம்பர் படத்துக்கு பிறகு இவர் இசையமைத்த பல பாடல்கள் ரசிகர்களை லைக்ஸ் போட வைத்ததால் டக்கென டாப் இசையமைப்பாளர்களின் லிஸ்டில் இடம்பிடித்து விட்டார்.

இந்நிலையில், பிரம்மாண்ட இயக்குநரும், தெலுங்கில் முன்னணி ஹீரோ ஒருவரும் இணைந்து நடிக்கும் ஒரு புதிய படத்தில் அந்த இசையமைப்பாளர் ஒப்பந்தமானார். ஆனால், கம்போஸ் பண்ணிய பாடலில் ஏதேனும் கரெக்ஷன் செய்ய இயக்குநர் போன் செய்தால், இசையமைப்பாளர் போனையே எடுப்பது இல்லையாம். மெசேஜ் அனுப்பினாலும் பதில் அனுப்ப இரண்டு நாட்கள் ஆகி விடுகிறதாம். இதனால் கடுப்பான பிரம்மாண்ட இயக்குநர், இவரை படத்திலிருந்து நீக்கிவிட்டு வேறு ஒரு டாப் இசையமைப்பாளரை கமிட் செய்து விட்டாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus