உதயநிதி ஸ்டாலினுடன் கூட்டணி அமைக்கும் ‘கர்ணன்’ பட இயக்குநர்… படத்துக்கு இசை யார் தெரியுமா?

  • July 21, 2021 / 11:51 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இப்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘ஏஞ்சல், கண்ணை நம்பாதே’, ‘ஆர்டிகிள் 15’ ரீமேக் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

நடிகரும், திமுக-வின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டிருந்தார். கடந்த மே மாதம் 2-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளி வந்தது. உதயநிதி ஸ்டாலின் 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றார். தற்போது, நடிகரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தை ‘கர்ணன்’ புகழ் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளாராம். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இப்படத்தை முடித்த பிறகு அரசியலில் மட்டுமே முழு கவனம் செலுத்தலாம் என முடிவெடுத்துள்ளாராம் உதயநிதி ஸ்டாலின்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus