‘#D51’-ல் தனுஷுடன் இணைந்து நடிக்கும் முன்னணி தெலுங்கு ஹீரோ… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

  • August 29, 2023 / 08:52 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘கேப்டன் மில்லர், தேரே இஷ்க் மெய்ன்’, இயக்குநர் சேகர் கம்முலா படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் சேகர் கம்முலா இயக்கும் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகுகிறது. தனுஷின் கேரியரில் 51-வது படமான இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP – அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இதில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் நடிக்க நாகார்ஜுனா ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. மிக விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus