நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் முன்னணி தெலுங்கு ஹீரோ!

  • December 17, 2021 / 08:54 PM IST

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, Mr.லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, ஹீரோ, டாக்டர்’ என படங்கள் குவிந்தது. இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான்’, ‘டான்’, ‘சிங்கப்பாதை’ மற்றும் இயக்குநர் அனுதீப் கேவி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

நேற்று முன்னணி தெலுங்கு நடிகர் நானி அவர் நடித்திருக்கும் புதிய படமான ‘ஷியாம் சிங்கா ராய்’ (தெலுங்கு) படத்தின் தமிழ் வெர்ஷன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார். அவரிடம் “உங்களுடைய படங்களை இங்கே சிவகார்த்திகேயனை ரீமேக் செய்ய சொல்லி அவருடைய ரசிகர்கள் கேட்கிறார்கள், அங்கு டோலிவுட்டில் சிவகார்த்திகேயன் படங்களை அங்கே ரீமேக் செய்ய சொல்லி உங்களிடம் ரசிகர்கள் கேட்ட வண்ணமுள்ளனர்.

நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பீர்களா?” என்ற கேள்வியை ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார். அதற்கு நானி “கண்டிப்பாக இருவரும் சேர்ந்து நடிக்கும் வகையில் ஒரு சூப்பர் கதையுடன் எந்த இயக்குநர் வந்தாலும், சிவகார்த்திகேயனுடன் பேசி அவருக்கும் பிடித்திருந்தால் கண்டிப்பாக பண்ணுவோம்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.