பிரபல தமிழ் பட நடிகரான சிலம்பரசன்(சிம்பு) சர்ச்சைக்குரிய செய்திகளில் இடம்பெறுவது வழக்கம். இந்நிலையில் திருமணம் பற்றிய வதந்தி செய்தியில் சிம்பு தற்போது சிக்கியுள்ளார்.
இதைப்பற்றி பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான சிம்புவின் தந்தை டிஆர் அவர்கள் கூறியதாவது “எங்கள் மகனுக்கு வரன் தேடும் செய்தி உண்மை. நல்ல பொருத்தமான பெண்ணை தேடி வருகிறோம், ஆனால் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்ற செய்திகள் வதந்தி மட்டுமே. இதை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
சிம்புவின் தம்பியான குறளரசன் அவர்களுக்கு நபிலா R அகமத் என்பவருடன் சென்ற ஆண்டு திருமணம் முடிந்தது முதலே சிம்பு திருமணம் பற்றிய வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதைப் பற்றி சிம்பு அவர்கள் மறுத்து கூறியது மட்டுமல்லாமல் தனக்கு திருமணம் நடைபெற்றால் அவரே முன்வந்து அதைப்பற்றி மக்களிடம் தெரிவிப்பார் என்று குறிப்பிட்டிருந்தார்.
சிம்பு நடித்து வெளியான குறும்படமான கார்த்திக் டயல் செய்த எண் தற்போது இணையங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த குறும்படம் அவர் நடித்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வெற்றிபெற்ற விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இதற்கு நடுவில் இந்த திருமண செய்தியால் சிம்பு பற்றி இணையங்களில் அதிக அளவில் செய்திகள் வந்து கொண்டுள்ளது. இவர் ஊரடங்கு முடிந்து திருமண செய்தியை வெளியிடுவார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.