வைரலாகும் தேசியநெடுஞ்சாலை போஸ்டர்- தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி
June 9, 2020 / 10:01 PM IST
|Follow Us
தமிழில் பிரபல நடிகரான தனுஷ் , தன் படங்களில் அதீத நடிப்பாற்றல் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பிரபல தமிழ் பட இயக்குனரான வெற்றிமாறனுடன் தனுஷ் பொல்லாதவன் , ஆடுகளம், வடசென்னை ,அசுரன் போன்ற பல மாபெரும் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர்கள் கூட்டணியில் வட சென்னை -2 மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவரயிருந்த ‘தேசிய நெடுஞ்சாலை’யின் போஸ்டர் இணையதளங்களில் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தனுஷ் தன் கையில் ஒரு கத்தி வைத்துள்ளார் மேலும் தமிழ்நாட்டின் வரைபடம் அதில் இடம்பெற்றுள்ளது.
இந்தத் திரைப்படம் பொல்லாதவன் படத்திற்கு பின்னர் வெளிவர இருந்ததாகவும், இந்த படத்தில் ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராகவும் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதாகவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சில தயாரிப்பு பிரச்சனை காரணமாக இந்த படம் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்படத்தின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் நிறுத்தி வைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை கதையை தழுவியே உதயம் NH4 எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.