தோனியின் பிறந்தநாளுக்கு குவியும் சினி பிரபலங்களின் வாழ்த்துகள்!

  • July 7, 2020 / 09:12 PM IST

முன்னால் கிரிக்கெட் வீரர் மற்றும் “கேப்டன் கூல்” என்றழைக்கப்படும் தோனி, இன்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இவரது ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

மகேந்திர சிங் தோனிக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம்.இவரை மாஸ் ஃபினிஸர் என்று அழைப்பார்கள்.அவர் ஒவ்வொரு போட்டியிலும் பேட்டிங் செய்யும் விதம் விருவிருப்பாக இருக்கும்.

இவரது ரசிகர்கள் #HappyBirthdayDhoni எனும் ஹேஸ்டேகை இணையதளத்தில் தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

இந்த வரிசையில் சினிமாவில் பல பிரபலங்கள் தோனியின் பிறந்தநாளையொட்டி வாழ்த்துக்களை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள்.இவர்கள் தோனி பிறந்தநாள் ட்ரிபியூட் வீடியோக்களை வெளியிட்டும் வருகிறார்கள்.

மேலும் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இவர் செயல்பட்டு வந்ததால் தமிழகத்திலும் இவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தோனி பிறந்தநாளையொட்டி ஒரு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளார். பேட்டை படத்தில் வரும் “மரண மாஸு” பாடலில் தோனி இருப்பதுபோல உருவாக்கி வெளியிட்டுள்ளார். இவர் குறிப்பிட்டுள்ளதாவது” ஹாப்பி பர்த்டே டியரஸ்ட் 7. நீங்கள் ஒரு எமோஷன்”.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி நீலகண்டன் தான் தோனியை இன்டர்வியூ செய்த ஒரு வீடியோவை வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இவர் குறிப்பிட்டுள்ளதாவது” தோனி என்பது ஒரு பெயர் அல்ல ஒரு எமோஷன். ஹாப்பி பர்த்டே தல.. கடவுள் உங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்து ஆசீர்வதிப்பாராக” என்றிருக்கிறார்.

மேலும் மற்றொரு நிகழ்ச்சி தொகுப்பாளினி பாவனா, தளபதி விஜய்யின் பாடலான “குட்டி ஸ்டோரி” பாடலை ரீமேக் செய்து தோனி பற்றி தனது குரலில் பாடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் மற்றும் நடிகர் வெங்கட்பிரபு தோனி பிறந்தநாள் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் பிரணிதா “தோனி ஒரு லிவிங் லெஜெண்ட்”என்று கூறிய தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர்களைப் போலவே பல சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை முன்னாள் கிரிக்கெட் வீரர் தல தோனிக்கு தெரிவித்து வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus