அஜர்பைஜானுக்கு சென்ற நடிகை த்ரிஷா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • October 13, 2023 / 06:51 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. ஆரம்பத்தில் ‘ஜோடி’ படத்தில் கெஸ்ட் ரோலில் மட்டுமே வந்து சென்றார். அதன் பிறகு ‘மௌனம் பேசியதே’ படத்தில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார் த்ரிஷா. இதில் ‘சந்தியா’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்து ரசிகர்களின் லைக்ஸை குவித்தார்.

‘மௌனம் பேசியதே’ ஹிட்டிற்கு பிறகு த்ரிஷாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மனசெல்லாம், சாமி, லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆய்த எழுத்து, திருப்பாச்சி, உனக்கும் எனக்கும், அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, 96, பேட்ட, பரமபதம் விளையாட்டு, ராங்கி, பொன்னியின் செல்வன் 1 & 2’ என படங்கள் குவிந்தது.

தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் த்ரிஷா. இப்போது இவர் நடிப்பில் ‘கர்ஜனை, சுகர், ராம், லியோ, சதுரங்க வேட்டை 2, ஐடென்டிட்டி, விடாமுயற்சி’ என ஏழு படங்களும், ‘பிருந்தா’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

தற்போது, அஜர்பைஜானில் நடைபெறும் அஜித்தின் ‘விடாமுயற்சி’ ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக த்ரிஷா அங்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுத்த ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus